அதிமுக கறை படிந்த கட்சி வேஷ்டியை அணியக்கூடாது என்று யாராவது சொன்னால் தன் மீது வழக்குத் தொடரட்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆவேசமாக ஒருமையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதிக்குள் தாங்கள் ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் முத்தையாபுரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 17-ம் தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்குச் சென்று 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
அதிக மது கடைகள் இருக்கின்ற மாநிலம், அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்ற மாநிலம், அதிகமான இளம் விதவைகள் இருக்கின்ற மாநிலம் என மதுவால் பல விஷயங்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஒசூரில் காரை உரச வந்ததாக கூறி டிப்பர் லாரி டிரைவரை தாக்கிய திமுக பகுதி செயலாளரைக் கைது செய்யக்கோரி 300க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
யார் கட்சி தொடங்கினாலும் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் திமுக பயணிக்கும் எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எதைப் பற்றியும் கவலை கொள்ளாது எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் நல்லூர் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டால் அன்றைய தினமே திமுக ஆட்சி கலைந்து விடும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீடு ரத்தானால், தமிழகம் முழுவதும் மிகப் பெரிய கலவரம் வெடித்து பதட்டமான சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்தார்.
தொழில்நுட்பக் கோளாறு அடைந்த ஸ்டார்லைனர் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.