பாஜக தமிழ்நாட்டில் வளரவே இல்லை என தெரிவித்திருக்கும் அமைச்சர் ரகுபதி, பணபலத்தை வைத்துக் கொண்டு மாயத்தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தாமிர ஆலையை சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கத்தால், ஆக்சிஜன் தேவை திடீரென்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் வெளிவந்தன.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அத்தியாவசியமான ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி, அதன் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை திறக்கலாம் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் (Oxygen) உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், தூத்துக்குடி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை உயிர்க்காற்று ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7200 லிட்டர் உயிர்க்காற்று ஆக்கித் தரும். ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36000 லிட்டர் ஆக்க முடியும்.
மாசு தொடர்பான விவகாரத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை 2018 மே மாதம் மூடப்பட்டது. ஆலையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.