புது டெல்லி: கோவிட் -19 தொற்றுநோயால் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு அதிக தேவை இருப்பதால், வேதாந்தா குழு தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள, தற்போது மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்ஸிஜனை தயாரித்து இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும். ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். அதை இலவசமாக வழங்க முடியும் என தனது மனுவில் கூறியுள்ளது.
அதுமட்டுமில்லால் இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழக முதல்வர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நிறுவனம் கடிதங்களை எழுதியுள்ளது.
ALSO READ | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு
இதுக்குறித்து ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் குமார் எழுதிய கடிதத்தில், இந்த ஆலையில் தினமும் 1,050 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் அலகு உள்ளது. நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க, ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வழங்க விரும்புகிறோம்" என்று கடிதத்தில் தெரிவித்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR