தூத்துக்குடி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதி உச்சத்தை அடைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு சுகாதார சிக்கல்கள் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் சுகாதார பேரிடரை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அதற்கு சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
இதற்கான நீண்டகால திட்டங்கள் ஒருபுறம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போதைய நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, இன்றைய முக்கியத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Also Read | தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கான வாய்ப்பு
இதன் அடிப்படையில் பல்வேறு பிரச்சனைகளால் மூடிக் கிடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக அண்மையில் ஸ்டெலைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. நீண்ட காலமாக மூடிக் கிடந்த ஆலையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் கவனமாக மேற்கொண்டு உற்பத்திப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?
இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிர்விக்கும் பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டது. பழுது நீக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக அனைத்து தர பாதுகாப்பு நிலைகளும் உறுதி செய்யப்பட்ட பிறகு, நேற்று திரவ ஆக்சிஜன் உற்பத்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் தொடங்கியது. இன்று (19-05-2021) முதல் மருத்துவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஏற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR