தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் வாக்குவாதம். இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு பாரபட்சமின்றி அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை (Sterlite Plant) ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், தூத்துக்குடி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் (Oxygen) உற்பத்தி செய்ய முடியும். எனவே ஆக்சிஜன் தயாரிக்க ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
ALSO READ | ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் வாதத்திற்கு தமிழக அரசு (TN Govt) தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று தள்ளி வைத்துள்ளனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR