தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு

மாசு தொடர்பான விவகாரத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை 2018 மே மாதம் மூடப்பட்டது. ஆலையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2020, 05:54 PM IST
  • ஸ்டெர்லைட் ஆலை 2018 மே மாதம் மூடப்பட்டது.
  • ஸ்டெர்லைட் ஆலை (Sterlite Plant) மீண்டும் திறக்க அனுமதிக்கப்படக்கூடாது: தமிழக அரசு
  • போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு title=

தூத்துக்குடி  செய்திகள்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவிப்பதால், ஆலை மீண்டும் திறக்கப்படுவதற்கு தமிழக அரசு இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஆலை 2018 மே மாதம் மூடப்பட்டது.

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று, பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க வேண்டு என்ற கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்பொழுது, ​​தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மாநில அரசு பிறப்பித்த உத்தரவு ஆலையை "நிரந்தரமாக மூடுவதற்கு" தான் என்று விளக்கம் அளித்தார். மேலும் இந்த முடிவை நீதிமன்றம் உறுதி செய்தது என்று வைத்தியநாதன் (Vaidyanathan)  வாதிட்டார்.

அதாவது "ஸ்டெர்லைட் ஆலை (Sterlite Plant) மீண்டும் திறக்க அனுமதிக்கப்படக்கூடாது" என்று மாநில அரசு தெளிவாகத் தெரிவித்துள்ளது.

வேதாந்தா லிமிடெட் (Vedanta Ltd) நிறுவனம் சார்பாக வைக்கப்பட்ட வாதங்களில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சின்ஹா ​​மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோரின் பெஞ்சி அளித்த உத்தரவுப்படி அனைத்து அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ALSO READ |  ஸ்டெர்லைட் போராட்டம்.... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்!!

"ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாட்டிற்கான பல்வேறு நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன" என்று கூறிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மூன்று மாத சோதனை அடிப்படையில் ஆலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

ஆலை பாதுகாப்பானதாக இருக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் அமர்வு அவகாசம் அளித்துள்ளது.

ALSO READ |  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு: சென்னை HC தீர்ப்பு!!

மாசு தொடர்பான விவகாரத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை 2018 மே மாதம் மூடப்பட்டது. ஆலையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News