டெல்லியில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள்.
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் இருவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
குடிநீர் தொட்டி அமைக்காத கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து வாழைமரம் நடும்போராட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தொட்டியை அமைக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொள்ளும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தண்ணீர் தொட்டி கட்ட தோண்டிய இடத்தில் வாழைமரம் நடும்போராட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
டெல்லியில் தொடர்ந்து 11 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
7வது நாளாக விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள சாலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய வேட்டியை கழட்டி சாலையில் விரித்து, பிச்சைக்காரர்கள் போல் படுத்துகிடக்கிறார்கள். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்தாலே நெஞ்சு பதை பதைக்கிறது.
டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் இருந்து வரும் தமிழக விவசாயிகளில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்க கூடாது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்ச் 2-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த இருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து சாதிக் பாட்ஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என்று உத்தரவிட்டனர்.
கடந்த 6-ம் தேதி இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ (22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ய வந்த, வருவாய்த் துறை அதிகாரிகளை தடுத்து, கிராம மக்கள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 31 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க, கடந்த, 15-ல், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
இதையடுத்து பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போரட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தர சட்டம் இயற்றக் கோரி கடந்த 17-ம் தேதி முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சில தீய சமுக விரோதிகளால் திடீரென வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என பிரபலங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்களின் போராட்டத்தை கலங்கிய கண்களோடு பார்ப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிகட்டு தடைக்கு எதிராகவும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தற்போது ஒட்டுமொத்த தமிழினமே ஒன்று திரண்டு போராடிக் கொண்டிருக்கிறது. அவர்களின் போராட்டத்தை கலங்கிய கண்களோடு பார்ப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி டெல்லி, குஜராத், மும்பை ஆகிய இடங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறது.
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் பீட்டாவிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து புதுவையில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த புதுவையில் உள்ள தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஓன்று சேர்ந்து "போராளிகள்" குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த போராளிகள் குழுவின் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.பந்த் போராட்டத்தினால் புதுவை பஸ்நிலையம் முழுமையாக வெறிச்சோடி கிடந்தது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களும், புதுவைக்கு வரும் பஸ்களும் வரவில்லை.
ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இச்சந்திப்பில் திருப்திகரமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசரச்சட்டத்தை இயற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.