வடகொரியாவின் உச்சத் தலைவர் கிம் ஜாங்-உன் ராணுவ கட்டுக்கோப்பு கொண்டவர் என்று சொல்லப்படுவதுண்டு. அவரது பலவிதமான உணர்வுகளின் புகைப்படத் தொகுப்பு... இன்றைய தசாவதார நாயகன் பட்டம் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் அவர்களுக்கு...
சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசின் தாக்கத்தினாலும், பாதிப்பினாலும் அச்சமடைந்திருக்கும் நிலையில், மருத்துவ முகக்கவசங்களை அணிந்த வட கொரியர்கள் தலைநகர் பியோங்யாங்கில் (Pyongyang) கூடியுள்ளனர். இந்த செய்தியை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
காணாமல் போவது வட கொரிய ஆட்சியாளர்களின் பொழுதுபோக்கா என்ற கேள்வி எழும் அளவிற்கு, அங்கு அவ்வப்போது யாராவது காணாமல் போவிடுகிறார்கள். ஊகங்கள் வலுப்பெற்று எல்லை மீறும்போது திரும்பி வந்து விடுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னால், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்க்-உன் காணாமல் போனார். அவர் எங்குள்ளார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது அவரது சகோதரி கிம் யோ-ஜோங்கைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் மறைந்த அதிபர் கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர், கிம் ஜாங் உன் கோமாவில் உள்ளார் என்றும், அதனால்தான் அவரது சகோதரிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நாட்டின் அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஒரு இராணுவக் கூட்டத்தை நடத்தியதாக மாநில ஊடக KCNA ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து அதிகரித்து வரும் ஊகங்களுக்கு மத்தியில், தென் கொரியா கிம் ஜாங் உன் "உயிருடன் இருக்கிறார்" என்று செய்திகள் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான வட கொரிய தலைவர் கிம்-ன் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெறவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறை ஆகும்.
இரண்டு நாள் பயணமாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றார்.
அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் மனமாற்றம் காரணமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.