கிம் ஜோங் உன் - டொனால்ட் டிரம்ப் சிங்கப்பூரில் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்!

Last Updated : May 8, 2018, 07:50 AM IST
கிம் ஜோங் உன் - டொனால்ட் டிரம்ப் சிங்கப்பூரில் சந்திப்பு!  title=

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில் அணு ஆயுத சோதனை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் தொலை தூரம் தாக்கும் ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

இதனையடுத்து, ஏப்.,21 முதல் அணுஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்த அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னதாக தென்கொரியா தூதரக குழுவிடம் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்திக்க விரும்புவதாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படாமல் இருந்தது. கடந்த 4-ம் தேதி டெனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் அதுவரை காத்திருங்கள் என்றார்.

இதையடுத்து, தென்கொரியாவில் இருந்து வெளிவரும் நாளிதழ்களில் கூறப்பட்டுள்ளது, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஜூன் 8-ம் தேதி கனடாவில் நடக்க உள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் ஜூன் 9-ம் தேதி சிங்கப்பூரில் நடக்க உள்ள மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Trending News