திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள்: முன்பதிவு செய்வது எப்படி?

திருப்பதி வைகுண்ட ஏகாதசி 2025 டிக்கெட்டுகள் தொடர்பான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. உங்கள் டிக்கெட்டுகளை எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Dec 24, 2024, 03:03 PM IST
  • வைகுண்ட ஏகாதசி 2025 டிக்கெட்ட்.
  • ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள்: முன்பதிவு செய்வது எப்படி? title=

ஆன்லைனில் திரைப்படங்கள், கச்சேரிகள், பயணங்கள் போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறோம். அதே போல திருப்பதி கோவிலுக்கு செல்லவும் முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை, வைகுண்ட ஏகாதசி சிறப்பு நிகழ்ச்சிக்கான ஆன்லைன் முன்பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆன்மீக நிகழ்வு ஜனவரி 10 முதல் 19 வரை நடைபெறும், இந்த நேரத்தில் ஏராளமான மக்கள் திருப்பதி கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 23 முதல் வைகுண்ட துவாரத்தைக் காண டிக்கெட்கள் முன்பதிவு தொடங்கி உள்ளது. சிறப்பு தர்ஷன டிக்கெட்டுகள் இன்று டிசம்பர் 24 முதல் ஆன்லைனில் கிடைக்கும்.

மேலும் படிக்க | புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்: சம்பளம் எகிறப்போகுது

திருப்பத்திக்கு வர விரும்பும் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி நடைபெறும் 10 நாளும் வைகுண்ட துவாரம், கருவறையைச் சுற்றியுள்ள புனித பாதை திறக்கப்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் சிறப்பான மற்றும் புனிதமான தெய்வீக அனுபவத்தைப் பெற முடியும். ஸ்லாட் சர்வ தர்ஷன் (SSD) டோக்கன்கள் திருப்பதியில் எட்டு மையங்களிலும், திருமலையில் ஒரு மையத்திலும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களைக் கையாளும் வகையில் விநியோகிக்கப்படும். திருப்பதியில் எம்ஆர் பள்ளி, ஜீவகோனா, ராமாநாயுடு பள்ளி, ராமச்சந்திரா புஷ்கரிணி, இந்திரா மைதானம், சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி வளாகத்திலும், திருமலையில் கௌஸ்துபம் விருந்தினர் மாளிகையில் டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தான தலைமைப் பொறியாளர், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த மையங்களில் அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். வைகுண்ட துவார தரிசனத்திற்கு டோக்கன்கள் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். டோக்கன் இல்லாத நபர்கள் திருமலைக்கு வருகை தந்தாலும், அவர்கள் தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

வைகுண்ட ஏகாதசி விஐபி தரிசனம் ஜனவரி 10 அதிகாலை 4:45 மணிக்கு தொடங்குகிறது. காலை 9 மணி முதல் 11 மணி வரை பிரம்மாண்டமான தங்க ரதம் ஊர்வலம் நடைபெறும். அடுத்த நாள் ஜனவரி 11 அன்று ஸ்ரீவாரி புஷ்கரிணியில் கோயில் குளம் காலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை சக்ரஸ்நானம் சடங்கு நடைபெறும்.

திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு ஏற்பாடுகள்

  • வைகுண்ட ஏகாதசிக்கு அதிகப்படியான மக்கள் வர உள்ளதால் அவர்கள் தங்க நிறைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • திருமலையில் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை அன்னதானம், டீ, காபி, பால், உப்மா, சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கலி வழங்கப்படும்.
  • பக்தர்களுக்கு தடையின்றி லட்டு விநியோகம் செய்ய 3.5 லட்சம் லட்டுகள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது.
  • கோவிலை சுற்றி சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக உள்ளூர் காவல்துறையினர் அதிக அளவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழா ஆகும், இதற்காக திருமலைக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். வைகுண்ட ஏகாதசியின் புனித நாளில் வெங்கடேசப் பெருமானிடம் ஆசிர்வாதம் பெற இந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள, விரைவாக டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு TTD கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News