டிரம்ப்பின் திடீர் மனமாற்றம்: ஜூன் 12-ம் தேதி கிம் ஜாங் உன் சந்திப்பு உறுதி!!

அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் மனமாற்றம் காரணமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!  

Last Updated : May 27, 2018, 01:18 PM IST
டிரம்ப்பின் திடீர் மனமாற்றம்: ஜூன் 12-ம் தேதி கிம் ஜாங் உன் சந்திப்பு உறுதி!! title=

சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகியது. கடந்த மாதம் (ஏப்ரல்) 27 ஆம் இரு நாட்டி தலைவர்களும் சந்தித்து பேசிக்கொண்டனர். இதனை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என உலக நாடுகள் பாராட்டினர். 

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம் கடந்த 4-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, வரும் ஜூன் 12 ஆம் தேதி வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியது. 

என்னினும், அமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் கீ-க்வான் கூறியதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனால், கடந்த வியாழக்கிழமை டிரம்ப் ஜூன் 12-ம் தேதி இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உங்களை சிங்கப்பூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உங்களது சமீபத்திய அறிக்கையில் கடும் கோபமும், வெளிப்படையான விரோத போக்கும் வெளிப்பட்டு இருப்பதால் தற்போதைய சந்திப்பு பொருத்தமானதாக இருக்காது” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை வடகொரியா முற்றிலுமாக தகர்த்த நிலையில் டிரம்ப் இவ்வாறு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அமெரிக்க மற்றும் தென்கொரிய நாடுகளின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திட்டமிட்டப்படி சந்திப்பை நடத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்து பேச அவர் முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ந்தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

எனவே, டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந்தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News