Kim Jong Un: புலி பதுங்கியது எதற்கு? “Sorry" -க்கு பின்னால் உள்ள மர்மம் என்ன?

ஹிட்லரை விஞ்சும் அளவிற்கு செயல்படும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மன்னிப்பு உண்மையில் உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 01:49 PM IST
  • ஹிட்லரை விஞ்சும் அளவிற்கு செயல்படும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மன்னிப்பு உண்மையில் உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • வட கொரியாவின் எல்லையில் நுழைந்த தென்கொரியாவைச் சேர்ந்த நபரை, கடலில் வைத்தே விசாரணை நடத்திய பின்னர், வட கொரிய வீரர்கள் அவரை அந்த இடத்திலே சுட்டுக் கொன்றனர்.
  • பிரான்ஹா மீன்களிடம் ஒரு மனிதன் அகப்பட்டால் நொடிகளில் அவனை கடித்து குதறி, எலும்பு கூட்டை தனியாக எடுத்து விடும்
Kim Jong Un: புலி பதுங்கியது எதற்கு? “Sorry" -க்கு  பின்னால் உள்ள மர்மம் என்ன?  title=

ஹிட்லரை விஞ்சும் அளவிற்கு செயல்படும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மன்னிப்பு உண்மையில் உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விந்தியான வட கொரியாவின் (North Korea)  அதிபர் கிம் ஜாங் உன் ( Kim Jong Un) , உலக தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவர். அவர் கொடுக்கும் உத்தரவுகளும் அளிக்கும் தீர்ப்புகளும் மிகவும் கொடூரமனவையாகவும் வினோதமானவையாகவும் இருக்கும்.

வட கொரிய அதிபர் தனது எதிராளிகளை, தன்னை எதிர்ப்பவர்களுக்கு வழங்கும் தண்டனைகளை கேட்டால் நமக்கு குலை நடுங்கும். அவரது  மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில், தன்னை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவே, பிரான்ஹா வகை மீன்களை (piranha fish) வளர்ப்பதாக கூறப்படுவதுண்டு. 

பார்க்க மிக சிறிதாக இருக்கும் பிரான்ஹா மீன்களிடம் ஒரு மனிதன் அகப்பட்டால் நொடிகளில் அவனை கடித்து குதறி, எலும்பு கூட்டை தனியாக எடுத்து விடும்.

தன்னை எதிர்ப்பவர்களை இந்த நீச்சல் குளத்தில் தூக்கி போட்டு விடுவார் என கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட கொடுங்கோலனாக திகழும் வட கொரிய அதிபர் kim Jong Un, சாரி கேட்கிறார் என்றால் குழப்பம் வருவது இயற்கை தானே....

மேலும் படிக்க | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு

வட கொரியாவில், சில நாட்களுக்கு முன்பாக, சந்தேகத்திற்கிடமான வகையில் வட கொரியாவின் எல்லையில் நுழைந்த தென்கொரியாவைச் சேர்ந்த நபரை, கடலில் வைத்தே விசாரணை நடத்திய பின்னர், வட கொரிய வீரர்கள் அவரை அந்த இடத்திலே சுட்டுக் கொன்றனர்.  பின்னர் அவரது உடலையும் எரித்து விட்டனர்.

மேலும் படிக்க | நடுக்கடலில் விசாரணை, நொடிப்பொழுதில் தீர்ப்பு…வட கொரியாவும் அதன் நியாயங்களும்!!

அதற்கு தென் கொரியா கண்டனம் வெளியிட்ட பின்னர், அதற்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு தெரிவித்ததாகத் தென் கொரியா அறிக்கை வெளியிட்டுள்ளது. 

வட கொரிய அதிகாரி கிம் ஜாங் உன், இந்த எதிர்பாராத சம்பவத்திற்காக, தென் கொரிய மக்களிடமும்,  தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் (Moon Jae-in) இடமும் வருத்தம் தெரிவித்தார் என என்று  தென் கொரிய அதிபர் மூன் ஆலோசகர் சு ஹூன் கூறினார்.

மன்னிப்பு என்பது அகராதியில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்பது போல் வாழ்ந்து வரும், வட கொரிய சர்வாதிகாரியின் இந்த மன்னிப்பு, உண்மையிலேயெ உலக நாடுகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி தான்.

இதற்கு பின்னால், இரு காரணங்கள் இருப்பதாக, உலக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

வட கொரியாவில், தற்போது பொருளாதார நிலை மோசமாக உள்ளதோடு, உணவு தட்டுபாடு நிலவுகிறது. இதனால், இப்போது எதற்கு தென் கொரொயாவை வம்புக்கு இழுக்க வேண்டும் என வட கொரிய அதிபர் நினைக்கிறார் என வல்லுநர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | வட கொரிய வரலாறு முக்கியம் அமைச்சரே... பாசமலர் தங்கையின் அதிரடி உத்தரவு..!!!

இரண்டாவது, தனது நெருகிய உற்ற தோழரான சீனா மீது, உலகமே கடுப்பில் உள்ள நிலையில், சீனாவில் நிலை பலவீனமடைந்து வருவதால், சர்வதேச அளவில், தான் ஒரு ஜனநாயக நாடு என்று எடுத்து காட்ட விரும்புவதாக கூறப்படுகிறது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News