அதிரடியான முதல் 5 கையெழுத்து: முதல்வர் ஜெயலலிதா

Last Updated : May 23, 2016, 02:47 PM IST
அதிரடியான முதல் 5 கையெழுத்து: முதல்வர் ஜெயலலிதா title=

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவை முடித்து கொண்டு தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஜெயலலிதா. 5 முக்கிய கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

அதைபற்றிய அரசு வெளியிட்ட செய்தி விவரங்கள்:

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறுகுறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர கால கடன் மற்றும் நீண்ட கால       கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யும் உத்தரவில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். 

2) 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். 

3) திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்துக்காக வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதில் இருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம்   என உயர்த்தி வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

4) கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை        750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். 

5) டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த நிலையில்    நாளை முதல் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும் எனவும் மற்றும் 500 டாஸ்மாக்    சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

Trending News