சட்டமன்ற தேர்தல் 2016 இந்திய அரசியலின் ராணிகள்!!

Last Updated : May 19, 2016, 06:46 PM IST
சட்டமன்ற தேர்தல் 2016  இந்திய அரசியலின் ராணிகள்!! title=

சட்டமன்ற தேர்தல் தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது. 

தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும். அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகளும், தமிழகத்தில் 232 தொகுதிகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. அதேபோல தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இவர்கள் இருவரும் தொடர்ந்து முதல்வர்களாக போகிறார்கள். பெண் முதலைமைச்சர்களான இவர்கள் தங்கள் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்து கொள்வதால் இவர்களை "இந்திய அரசயலில் ராணிகள்" என்று சொல்லுவது சரிதானே!.!.!

Trending News