இன்று தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை தொடங்குகிறது. பேரவையில் காலை 11 மணிக்கு ஆளுநர் கே.ரோசய்யா ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். இதில் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூட உள்ளது. கவர்னர் ரோசைய்யாவின் உரையாற்றலுடன் இக்கூட்டம் துவங்க உள்ளது. முதல்வர் ஜெயலலிதா அரசின் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள சட்டசபையின் முதல் கூட்டம் மே 25-ம் தேதி கூடியது. அன்று முதல்வராக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா பதவியேற்றார் மற்றும் புதிய உறுப்பினர்களின் பதவியேற்றனர்.
மீண்டும் ஜூன் 3-ம் தேதி சட்டசபை கூடியது. அதில் தமிழக சட்டசபைக்கான புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடந்தது. சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து வரும் 16-ம் தேதி சட்டப் பேரவை மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்
இதனையடுத்து இன்று மீண்டும் சட்டசபை கூட உள்ளது.
இந்த கூட்டத் தொடரின் போது, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளும்-எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உரையாற்றுவர். இந்த விவாதங்களுக்கு தமிழக அரசு சார்பில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார். பல்வேறு முக்கிய பிரச்னைகளை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அரசுத் தரப்பிலும் அந்த விவாதங்களுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதனால், பேரவை கூட்டத் தொடர் விவாதங்கள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸுக்கு 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். மற்ற கட்சிகள் பேரவையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.