கச்சத்தீவு குறித்து பேச திமுகவுக்கு அருகதை கிடையாது: ஜெயலலிதா

Last Updated : Jun 20, 2016, 01:01 PM IST
கச்சத்தீவு குறித்து பேச திமுகவுக்கு அருகதை கிடையாது: ஜெயலலிதா  title=

கச்சத்தீவு குறித்து பேச திமுக-வுக்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசியுள்ளார்.

சட்டசபையில் கவர்னர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. அப்போது திமுக உறுப்பினர் பொன்முடிக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்:

திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படும் துயரத்திற்கு திமுக தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக தான். கச்சத்தீவு குறித்த பேச திமுகவுக்கு அறுகதை கிடையாது.கச்சத்தீவ மீட்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கில் திமுக இணைத்து கொள்ளாதது ஏன்? அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கச்சத்தீவு தொடர்பான வழக்கில் அரசு இணைத்து கொள்ளப்பட்டது எனக்கூறினார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974-ம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு முதல்வராக கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக்கூறினார். 

Trending News