பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் - முதல்வர் ஜெயலலிதா

Last Updated : Jun 14, 2016, 05:47 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் - முதல்வர் ஜெயலலிதா title=

தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார். தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலிதா மதியம் டெல்லி போய் சேர்ந்தார்.

அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காவலர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பூரண கும்ப மரியாதை உள்ளிட்ட உற்சாக வரவேற்பும் ஜெயலலிதாவுக்கு வரவேற்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா மாலை 4.40 மணிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ்,  ஷீலா பாலகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கூட இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் வரை நீடித்தது. பிரதமருடனான இந்த சந்திப்பின் கோரிக்கை மனு ஒன்றையும் ஜெயலலிதா அளித்தார்.

 

 

 

 


Trending News