தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூட உள்ளது. கவர்னர் ரோசைய்யாவின் உரையாற்றலுடன் இக்கூட்டம் துவங்க உள்ளது. முதல்வர் ஜெயலலிதா அரசின் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள சட்டசபையின் முதல் கூட்டம் மே 25-ம் தேதி கூடியது. அன்று முதல்வராக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா பதவியேற்றார் மற்றும் புதிய உறுப்பினர்களின் பதவியேற்றனர்.
மீண்டும் ஜூன் 3-ம் தேதி சட்டசபை கூடியது. அதில் தமிழக சட்டசபைக்கான புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடந்தது. சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து வரும் 16-ம் தேதி சட்டப் பேரவை மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நாளை மீண்டும் சட்டசபை கூட உள்ளது.