Prime Minister Modi: கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என கடுமையாக விமர்சித்தார். திமுக 2ஜி ஊழல் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக கமிஷனுக்காக பட்ஜெட் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
TASMAC Quarter-only Trick: பல்வேறு வகையான மதுபானங்களின் விலையை தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் (TASMAC) உயர்த்தியது. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வந்த விலை உயர்வை சாதகமாக்கிக் கொண்டு நூதன மோசடி நடைபெறுவது அம்பலமாகியுள்ளது...
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் ஆறு மாதங்களில் விசார்ணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பிரச்சனைகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என ஊழலை மறைக்க மத கலவரத்தை தூண்டி அதன் பின்னணியில் ஒளிந்து கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது அவைகள் குறித்து விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.,
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை காவலில் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு நடைபெறும் இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவின் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார் என்பதால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் நீக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போது ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திட்டங்களை கொண்டுவர அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறியுள்ளார்.
அண்ணாமலை ஒரு காலி பாத்திரம் என விமர்சித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அவர் 2,500 கோடி ரூபாய்க்கு பினாமி என நான் கூட சொல்வேன் என தெரிவித்துள்ளார்.
ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய துபாய் நிறுவனத்தின் முகவரியும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்குகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.