கட்டுச் சோற்றை முழுங்கும் பெருசாலிகள் போல ஊழல் செய்யாதீர்கள் - துரைமுருகன் ஆவேசம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது அவைகள் குறித்து விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும்  கைது செய்யப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.,  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 25, 2023, 06:48 PM IST
  • வேலூரில் துரைமுருகன் ஆவேசம்
  • கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழல்
  • சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
கட்டுச் சோற்றை முழுங்கும் பெருசாலிகள் போல ஊழல் செய்யாதீர்கள்  - துரைமுருகன் ஆவேசம் title=

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய அதிநவீன ஆய்வகம் மற்றும் எடை மேடை ஆகியவைகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார். வேலூர் அம்முண்டியில் தமிழக அரசின்  கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ரூபாய் 95 லட்சம் மதிப்பில் நவீன ஆய்வகம்  மற்றும் எடைமேடை திறப்பு விழா, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் காமாட்சி உள்ளிட்டோருடன் திரளான விவசாயிகளும் பங்கேற்றனர். 

மேலும் படிக்க | உண்டியலில் ரூ.100 கோடி செக்! சாமிக்கே அல்வா கொடுத்த பக்தர்-அதிர்ந்து போன அர்ச்சகர்கள்!

இது சிறப்பு அழைப்பாளராக  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.  இதில்  மானிய விலையில் அறுவடை இயந்திரம் உழவு எந்திரங்கள் உள்ளிட்டவர்களும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,  சில நேரங்களில் நடந்துள்ள சில தவறுகளை மன்னித்துள்ளேன். 

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது. தவறுகள் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு  யார் யார்  என்னென்ன தவறுகள் செய்தார்கள் என கண்டுபிடித்து கையில் விலங்கு மாட்டாமல் விடமாட்டேன். திமுக தான் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் போட்டது.   சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பலர் பல ஆண்டுகளாக  தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அதுபோல் பத்தாயிரம் பேருக்கு மேல்  30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளனர். அவர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News