TASMAC Quarter-only Trick: பல்வேறு வகையான மதுபானங்களின் விலையை தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் (TASMAC) உயர்த்தியது. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வந்த விலை உயர்வை சாதகமாக்கிக் கொண்டு நூதன மோசடி நடைபெறுவது அம்பலமாகியுள்ளது...
மாநில அரசு மதுபான விலையை உயர்த்திய பிறகு டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர், அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான விதிமீறல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன...
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் சாதாரண வகைகளில் 43, நடுத்தர வகைகளில் 49, பிரீமியம் வகை பிராண்டுகளில் 128, பீர்களில் 128 வகைகள், ஒயின் வகைகளில் 13 என மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது
மதுபானங்களின் விலையை அளவு மற்றும் பிராண்டின் அடிப்படையில் பத்து ரூபாய் முதல் 80 ரூபாய் வரை டாஸ்மாக் உயர்த்தியது. மலிவான விலை மற்றும் அதிகம் விற்பனையாகும் பிராண்டுகளில் 180 மில்லி சரக்கின் விலை 10 ரூபாயும், 375 மில்லி மதுபானத்தின் விலையில் 20 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது
அரசு நிர்ணயித்த விலைக்கு மேலாக, விற்பனையாளர்கள் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிக்கின்றனர்
அரசு விலை உயர்த்தியபிறகு, 355 மில்லி பாட்டில் கேட்கும் நுகர்வோருக்கு, 180 மில்லி மதுபான பாட்டில்களாக இரண்டு கொடுக்க முயல்கின்றனர், இது விற்பனையாளருக்கு இரண்டு பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிக லாபத்தைக் கொடுக்கிறது
வேண்டுமென்றே 375 மில்லி பாட்டில்களை குறைவாகவும், 180 மில்லி பாட்டில்களின் கையிருப்பை அதிகமாக வைத்திருப்பதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். கையிருப்பு இருந்தாலும் அவற்றை மறைத்து வைத்து லாபம் பார்ப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது
மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இந்த மோசடி தொடர்கிறது என வாடிக்கையாளர்கள் புலம்புகின்றனர்
பழைய எம்ஆர்பி அச்சிடப்பட்ட மதுபாட்டில்களே விற்பனைக்கு இருப்பதாகவும், விலை பட்டியல் இல்லாததால், ஒவ்வொரு பிராண்டுக்கும் புதிய விலை என்ன என்பது தெரியவில்லை என்றும் குடிமகன்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்