தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மீது சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டார். விரைவில் அதனுடைய தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகும் என தெரிவித்திருக்கும் அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி ஒன்றை டிவிட்டரில் எழுப்பியுள்ளார். அதாவது, ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய துபாய் நிறுவனத்தின் முகவரியும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்குகின்றன என கேட்டுள்ளார்.
அண்மையில் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், திமுகவின் உரிமைத் தொகை 80 விழுக்காடு பெண்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். அது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 2014ல் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு ஒவ்வொருவரின் அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவேன் என்று சொன்னாரே செய்தாரா?, ஆனால் திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தபடி ஆயிரம் ரூபாய் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது என பதிலளித்தார். கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் கருப்பு பணத்தை மீட்பதாக கூறி மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்கள் கருப்பு பணத்தையும் மீட்கவில்லை, 15 லட்சத்தையும் கொடுக்கவில்லை என்று கூறினார்.
(@annamalai_k) July 12, 2023
இதற்கு டிவிட்டரில் பதில் அளித்திருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். 1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?" என கேட்டுள்ளார்.
மேலும் படிக்க | அயோத்தி பாபர் மசூதி கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டது! அறக்கட்டளையின் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ