பட்ஜெட் அறிவிப்பின்போது ரூ.3 லட்சம் என அறிவிக்கப்பட்ட ரொக்கப் பணப் பரிமாற்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
உயர் மதிப்பு கரன்சி தடை நடவடிக்கைக்குப்பின் வங்கியில் இருந்து ரொக்கம் எடுத்தல், ரொக்கப் பரிவர்த்தனை போன்றவற்றுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரொக்கப் பணப் பயன்பாட்டை குறைக்கும் விதித்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஊக்குவிக்கப்பட்டது.
பட்ஜெட்டுக்குப் வாசிப்புக்கு பின் இந்தியப்பங்குச் சந்தை உயர்ந்து காணப்பட்டது.
மத்திய அரசு 2017-18 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது 4_வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர், மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அரசியல் கட்சிகள் நிதிபெறுவதில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க சில புதிய நடைமுறையை அமல் படுத்தப்பட உள்ளது.
ஒருவரிடம் ரூ. 2000 மட்டும் ரொக்கமாக பெற முடியும். இதற்கு முன் 20,000 ரூபாய் வரை ரொக்கமாக பெற அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அரசியல் கட்சிகள் செக் மூலமோ அல்லது மின்னனு முறையிலோ நன்கொடை நிதியை பெற்றுக்கொள்ளலாம். செக் மூலமோ அல்லது மின்னனு முறையிலோ நன்கொடை நிதியை பெறுபவர்களுக்கு கட்டுப்பாடில்லை.
அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.
பட்ஜெடில் ரெயில்துறைக்கு முக்கிய அம்சங்கள்:-
ரெயில்வே துறைக்கு மொத்த ரூ 1,31,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நிதியில் இருந்து 55 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3500 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும்
மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரெயில்வே திட்டங்கள் உருவாக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பிறகு 2016-2௦17-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த முழு விவரங்க உள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளிலும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசி வருகிறார்.
2017-ம் ஆண்டிற்கான மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி இறுதியில் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முடிக்க ஒரு மாதம் முன்னதாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைவிட, பிப்ரவரி முதல் வாரம் அல்லது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே பொது பட்ஜெட் தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.