2017-18ல் பொருளாதார வளர்ச்சி 6.75% - 7.5% இருக்கும்- பொருளாதார ஆய்வறிக்கை

Last Updated : Jan 31, 2017, 02:13 PM IST
2017-18ல் பொருளாதார வளர்ச்சி 6.75% - 7.5% இருக்கும்- பொருளாதார ஆய்வறிக்கை  title=

பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பிறகு 2016-2௦17-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த முழு விவரங்க உள்ளன. 

2016-17 ஆண்டில் மொத்த பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  2017-18 ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.75 - 7.5 சதவீதமாக இருக்கும். 2016-17ல் தொழில்துறை வளர்ச்சி 5.2% ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை 4.1% வளர்ச்சி காணும்.

தொழிலாளர் வரி தொடர்பான சீர்திருத்தங்களை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களுக்கான பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. மேலும் பொருளாதாரம் சீரடைய கொள்கை அளவில் ஆதரவு அவசியம். உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் நாடு என்ற பெயரை இந்தியா தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Trending News