பட்ஜெட் 2017: இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வு

Last Updated : Feb 1, 2017, 02:21 PM IST
பட்ஜெட் 2017: இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வு title=

பட்ஜெட்டுக்குப் வாசிப்புக்கு பின் இந்தியப்பங்குச் சந்தை உயர்ந்து காணப்பட்டது.

மத்திய அரசு 2017-18 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது 4_வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர், மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சுமார் கிட்டத்தட்ட 2 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. முதல் முறையாக பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஒன்றிணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் வாசிப்பு முடிந்தவுடன் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்தும், நிப்டி 80 புள்ளிகள் அதிகரித்தும் காணப்பட்டன.

இதேபோல அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா அதிகரித்து, ரூ. 67.63 ஆக இருக்கிறது.

Trending News