பட்ஜெட் 2017: சலுகைகள் அறிவிக்கப்படுமா?

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Feb 1, 2017, 08:30 AM IST
பட்ஜெட் 2017: சலுகைகள் அறிவிக்கப்படுமா? title=

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

இதை தொடர்ந்து 2016-17 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நேற்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

தொடர்ந்து ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து வாபஸ் பெறுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை பாராளுமன்றத்திலும், மேல்-சபையிலும் பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் ராஜாங்க மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா தாக்கல் செய்தார்.

இதே போன்று, எதிரி சொத்து (திருத்தம் மற்றும் சரி பார்த்தல்) அவசர சட்டம், சம்பள பட்டுவாடா (திருத்தம்) அவசர சட்டம் ஆகியவற்றையும் பாராளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.

மேல்-சபையில் இந்த அவசர சட்டங்களை பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் மற்றொரு ராஜாங்க மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தாக்கல் செய்தார்.

முக்கிய எதிர்பார்ப்புகள்:

1) தனிநபர் வருமான வரி விலக்கு உயரக்கூடும்.

2) வரிக்கழிவு வழங்குவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படலாம்.

3) பங்குச்சந்தையில் இருந்து வருகிற மூலதன ஆதாயங்கள் மீது வரி விதிக்கப்படலாம். 

4) ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படலாம். 

5) சேவை வரிவிகிதம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

6) ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

7) மூத்த குடிமக்கள், பெண்களுக்கு சலுகை தரும் அறிவிப்புகள் வெளியாகலாம்.

8) புதிய ரயில்கள், பயணிகளுக்கான வசதிகள் அறிவிக்கப்படலாம். 

9) பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் சற்றே உயர்த்தப்படலாம். 

10) கல்வி கடனுக்கு எதிராக விதிவிலக்குகள்.

இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதல் முறையாக இதில் ரயில்வே பட்ஜெட் நடைமுறை நிறுத்தப்பட்டு, பொதுபட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படுகிறது.
இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட சில சலுகைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Trending News