மாட்டிறைச்சி சாப்பிடுவீங்க... கோமியம் குடிக்க மாட்டீங்களா? - தமிழிசை சர்ச்சை

TN Latest News Updates: மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தை குடிக்க மாட்டீங்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 21, 2025, 05:14 PM IST
  • பொங்கல் பரிசு தொகுப்பு பல லட்சம் மக்கள் வேண்டாம் என சொல்லும் நிலை
  • நாங்களும் விவசாயிகளுக்கு ஆதரவானர்கள்தான்
  • மாட்டின் கோமியத்தை 'அமிர்த நீர்' என்று கூறியுள்ளனர்
மாட்டிறைச்சி சாப்பிடுவீங்க... கோமியம் குடிக்க மாட்டீங்களா? - தமிழிசை சர்ச்சை title=

Tamil Nadu Latest News Updates: இந்திய ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற குப்பன் என்பவர் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஹவுஸில் இன்று நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக பசுமைத்தாயகத்தின் தலைவரான முனைவர் சௌமியா அன்புமணி, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குப்பன் எழுதிய நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

ரயில்வே துறைக்கு அமைச்சர் இல்லை...

அதை தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளரை சந்தித்தார். அதில், "தமிழகத்தில் ரயில்வே துறை இன்னும் வளரதா காரணம், இங்கு உள்ளவர்கள் தகவல்களை விரிவாக தெரியபடுத்துவதில்லை. தமிழகத்தில் ஜெயில அமைச்சர் இருக்கிறார், பெயில வந்த அமைச்சர் இருக்கிறார். ஆனால் ரயில்வே துறைக்கு அமைச்சர் இல்லை. பொங்கல் பரிசு தொகுப்பு பல லட்சம் மக்கள் வேண்டாம் என சொல்லும் நிலை உள்ளது. விளம்பர அரசு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயில்ல அமைச்சர் இருக்கும் போது ஏன் ரயில் அமைச்சர் இருக்கக் கூடாதா என கேள்வி எழுப்பினார். திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றாததற்கு காரணம் அக்கறை இல்லை. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு செல்ல விஜய் பறந்து போனாரா இல்லை, மறந்து போனாரா?" என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | சென்னை விஜிபியில் இருவருக்கு பாலியல் சீண்டல்... ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது!

பாலியல் குற்ற வழக்குகளை தீவிரப்படுத்த வேண்டும்

மேலும், மாநில அரசு தேர்வு செய்து கொடுத்த இடம்தான் பரந்தூர் என்றும் தான் வளர்ச்சிக்கு ஆதாரவானவன் என விஜய் கூறுவதை போல் நாங்களும் விவசாயிகளுக்கு ஆதரவானர்கள்தான் என்றார். நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றங்கள் வழக்கு தீவிரப்படுத்த வேண்டும் என்ற அவர் சபாநாயகர் அப்பாவு குற்றவாளி ஞானசேகரனை தம்பி என்று அழைக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், அரசியல் தலையீடுகள் இல்லாமல் வழக்கில் தீர்ப்பு வர வேண்டும் என்றும் கூறினார்.  

கோமியம் - அமிர்த நீர்

தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து பேசியது சர்ச்சையானதை ஒட்டி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"மாட்டின் கோமியத்தை 'அமிர்த நீர்' என்று கூறியுள்ளனர். மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளில் மாட்டின் கோமியத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாக தொழில்நுட்ப ரீதியாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை வழிநடத்துபவர் சும்மா கூறுவாரா...? என் உணவு என் உரிமை என்று கூறும் நீங்கள் விஞ்ஞானபூர்வமாக கோமியம் மருந்து என்று கூறுவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.

மேலும் படிக்க | தவெக தலைவர் விஜய் சொன்னது உண்மைதான் - நடிகை கௌதமி அதிரடி!

மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தை குடிக்க மாட்டீங்களா...? இவர்களுக்கு கோமியம் குடிப்பதில் பிரச்சனையில்லை, டாஸ்மாக்கில் குடிப்பதில் குறைந்துவிடுமோ என பயம். வேங்கைவயலில் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்தால் அது குற்றமில்லை... ஆனால், கோமியம் நல்லது என பேசினால் குற்றமா...? இதற்குத்தான் குதி குதி என குதிக்கிறார்கள்" என்றார். 

தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

தமிழிசையின் பேச்சுக்கு செல்வப் பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில்,"ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?

மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?. வடநாடுகளில், மாட்டை வைத்து அரசியல் செய்து, ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்" என்றார். 

மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகையில் வருகிறது மாற்றம்? இனி ரூ.1000 இல்லை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News