கடந்த ஆண்டு பிரமாண்ட பூஜையோடு SK25 திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் நட்சத்திர நடிகர்கள் பலர் சிவகார்த்திக்கேயனுடன் நடித்து வருகின்றனர். குறிப்பாக ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா ஆகியோ நடித்து வருகின்றனர். இதுவரை ஹரோவாக நடித்து வந்த ரவி மோகன் (ஜெயம் ரவி) இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். இதன் மூலம் தனது திரைப் பயணத்தில் புதிய அவதாரத்தை ரவி மோகன் (ஜெயம் ரவி) எடுத்துள்ளார்.
ஜி வி பிரகாஷின் 100வது படம்
இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவருக்கு 100வது திரைப்படம் ஆகும். இப்படத்தில் ஹிரோயினாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். குண்டூர் காரம், பகவந்த் கேசரி படங்கள் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானவை. நடிகை ஸ்ரீலீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
மேலும் படிங்க: ரேஷன் கார்டில் பிரச்சனை உள்ளதா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் இப்படம் கடந்த ஆண்டு புறானூறு என சூர்யா வைத்து இயக்க திட்டமிட்டுள்ள படம் என கூறப்படுகிறது. அப்படத்தின் டைட்டில் வீடியோ கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பராசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்குப் பராசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி படமும், அப்படத்தில் இடம்பெற்ற அந்த வைரல் டயலாக்கும் தான் ஞாபகம் வருகிறது.
Poster Art For #SK25 aka #Parasakthi @Siva_Kartikeyan @DawnPicturesOff pic.twitter.com/quCqTH4kR0
— Stone Brush Studios (@StoneBrush_offl) January 23, 2025
1952ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் தான் பராசக்தி. இப்படத்தின் மூலம் தான் சிவாஜி நடிகராக அறிமுகமானார். மறைந்த முன்னாள் கருணாநிதி இந்த படத்திற்கு திரைக்கதை எழுதிருந்தார். இப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ