தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து உணவு திருவிழாவை நடத்துகிறது. சென்னை தீவுத்திடலில் இன்று தொடங்கியிருக்கும் இந்தத் திருவிழாவானது ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. ஆனால் இந்த உணவுத் திருவிழாவில் பீஃப் உணவு இடம்பெறாதது பலரது மத்தியில் விவாதத்தை எழுப்பியது. மேலும், திராவிட மாடல் என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு எப்படி பீஃப் உணவை இதில் சேர்க்காமல் இருக்கலாம் எனவும் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் இன்று உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் பீஃப் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “உணவு என்பது தனி நபர் விருப்பம் சார்ந்தது; நானும் பீஃப் சாப்பிடுபவன்தான்; அரங்கு அமைப்பதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனால்தான் இந்தத் திருவிழாவில் பீஃப் உணவு சேர்க்கப்படவில்லை” என்றார்.
மேலும் படிக்க | இன்னும் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது - சென்னை உயர்நீதிமன்றம்
மேலும் பேசிய அவர், “கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உணவு பாதுகாப்புத் துறையில் மூன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஒன்று சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களின் விற்கும் நடைமுறைக்கு எதிரான விழிப்புணர்வு, உணவுப் பொருட்களின் லேபல்களில் பார்த்து தெரிந்து அறிந்து கொண்ட பிறகு பொருட்களை வாங்க வேண்டும் ஆகிய அறிவிப்புகள் வெளியானது.
சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற ‘உணவுத் திருவிழா 2022’ தொடக்க நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு.@Subramanian_ma அவர்களுடன் பங்கேற்று துவக்கி வைத்தோம். pic.twitter.com/M6kEWaoNU6
— P.K. Sekar Babu (@PKSekarbabu) August 12, 2022
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உப்பின் அளவையும் சர்க்கரையின் அளவையும் சற்றே குறைப்போம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் அதை அரசாங்கமே ஒரு லிட்டருக்கு ரூ. 30 என்று வாங்கிக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு: விசிகவினர் சாலை மறியல்
அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 23.33 லட்சம் லிட்டர் எண்ணெய் பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் நிகழ்ச்சிகளில் மீதம் உள்ள உணவை அரசு பெற்றுக் கொண்டு பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ