2.O படம் முதலில் திரைக்கு வரும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
துபாயில் பிரமாண்டமாக ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு நாடு திரும்பி நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
அப்பொழுது அவர் கூரியதாவது:-
‘முதலில் எந்த படம் வெளியாகும் ‘2.0’ அல்லது ‘காலா’ என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ரஜினி, “2.0 படம்தான் முதலில் திரைக்கு வரும்” என்றார். அதன் பிறகு தான் ‘காலா’ வரும் என தெரிவித்தார். அரசியல் சம்பந்தமான கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் நேற்று நடைபெற்றது
பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்ஷய்குமார், ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் மற்றும் டெக்னிஷீயன் கலந்துக்கொண்டனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆன்மிக பற்றும், ஆன்மிக சுற்றலாவிற்காக இமய மலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்ததே.
தற்போது, இமய மலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்க்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர்.
இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10-ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருவதாக தகவல் வந்துள்ளது.
தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.
இவர் நடிகை சீமாவை திருமணம் செய்து கொண்டார். அனு, அனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.
இவர் நடிகை சீமாவை திருமணம் செய்து கொண்டார். அனு, அனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
"மெர்சல் படத்தில் முக்கியமான பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது" என நடிகர் ரஜினிகாந்த் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!
’ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ பட நிறுவனத்தின் 100-வது படமான மெர்சல் திரைப்படம், நடிகர் விஜய் நடிக்க இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவந்தது. பல தடைகளுக்கு பிறகு இப்படம் திரைக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் தமிழக அரசியலை பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இவர் தொடர்ந்தது டிவிட்டர் மூலம் அரசியலுக்கு வந்து விட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இதன் மூலம் கமல் தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல், மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.
அபூர்வ ராகங்கள் வெளிவந்து இன்றுடன் 42 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக 24ஏம்ஸ்டுடியோஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. படத்தின் புரமோஷனுக்காக படக்குழு உலக சுற்றுலா ஒன்றையும் நடத்தி வருகிறது.
`2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் பிறந்தநாளான வருகிற டிசம்பர் 12-ஆம் பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் பாஜக தலைவர் பிரமோத் மஹாஜனின் மகளும் பாஜக இளைஞர் அணிக்குத் தலைவருமான பூனம் மஹாஜன் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார்.
சென்னையில் தமிழக சட்டப்பேரவையை பாஜக இளைஞர் அணியின் சார்பாக இன்று பேரணி நடத்தப்படுகிறது. இந்தப் பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக மக்களவை உறுப்பினர் பூனம் மகாஜன் சென்னை வந்து இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் வாயிலாக வெங்கய்ய நாயுடுவுக்கு, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைம் நிலையில். இப்பதவிக்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் அறிவிக்கப்பட்டனர்.
பெப்சி வேலைநிறுத்தம் விவகாரத்தில் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில்:-
"எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று "வேலைநிறுத்தம்" என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசிகூடிய சீக்கிரம் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்"
முரசொலி பவள விழாவில் கமல் மற்றும் ரஜினி அழைப்பு
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி துவங்கப்பட்டது. முரசொலி துவங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்துடன் 75 வருடங்கள் ஆகிவிட்டது. முரசொலி பத்திரிக்கையின் 75 ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திமுக சாபில் முரசொலிக்கு பிரம்மாண்டமான பவள விழா நடைபெறுகிறது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பவள விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
தனுஷ் இன்று தனது 34வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்.
தற்போது தனுஷ் மலேசியாவில் இருக்கிறார். அங்கு மலேசிய ரசிகர்கள் தனுஷிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனை தனுஷ், தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Was so overwhelmed by the love showered by fans in Malaysia .. was so touched when they sang happy birthday for me. Whatta birthday eve
— Dhanush (@dhanushkraja) July 27, 2017
கடந்த மே மாதம் 28-ம் தேதி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.
இதற்காக நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே 27-ம் தேதி மும்பைக்கு சென்றார். அங்கு 11 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மேலும் ஜூன் 8-ம் தேதி மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.
‘காலா’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் கடந்த மாதம் 22-ம் தேதி மாலை சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். மும்பையில் 5 நாள் படப்பிடிப்புக்கு பின்னர், அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.