முரசொலி பவள விழாவில் கமல் மற்றும் ரஜினி அழைப்பு
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி துவங்கப்பட்டது. முரசொலி துவங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்துடன் 75 வருடங்கள் ஆகிவிட்டது. முரசொலி பத்திரிக்கையின் 75 ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திமுக சாபில் முரசொலிக்கு பிரம்மாண்டமான பவள விழா நடைபெறுகிறது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பவள விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
இவ்விழாவில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை நடிகர்கள், பத்திரிக்கையாளர், எழுத்தாளர்கள், கலைஞ்சர்கள், புகழ்பெற்ற பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். மேலும் நடிகர் கமலும், ரஜினியும் கலந்து கொள்வார் என முன்னதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள முரசொலிக்கு பவள விழாவிற்கான அழைப்பிதழில் கமல்ஹாசன் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் வாழ்த்துரை வழங்கவதாக அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு பார்வையாளராக கலந்துக் கொள்கிறார்.
முரசொலி பத்திரிக்கையின் பவள விழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.