உதவி கேட்ட மாணவரை ‘செத்துப்போ’ எனக்கூறிய AI Chatbot! மனிதர்களின் அழிவு ஆரம்பமா?

AI Chatbot Gemini Verbally Abuses College Student : கூகுளின் ஜெமினை சாட்போட் AI, தன்னிடம் வீட்டுப்பாடத்திற்கு உதவி கேட்ட ஒரு மாணவரை ‘செத்துப்போ’ என்று கூறியிருக்கிறது. இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 17, 2024, 06:18 PM IST
  • வீட்டுப்பாடம் செய்ய உதவி கேட்ட மாணவர்
  • செத்துப்போக சொன்ன AI
  • அதிர்ச்சி பின்னணி!!
உதவி கேட்ட மாணவரை ‘செத்துப்போ’ எனக்கூறிய AI Chatbot! மனிதர்களின் அழிவு ஆரம்பமா?   title=

AI Chatbot Gemini Verbally Abuses College Student : கடந்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல உலக நாடுகளில் அதிகவேகமாக வளர்ந்த தொழில்நுட்பமாக இருக்கிறது, AI (Artificial intelligence). AI என்பது ஒரு விஞ்ஞானத் துறை. இது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் வழிகளில் கற்றுக்கொள்ள, பகுத்தறிவு பெற்று செயல்படக்கூடிய இயந்திரங்களை உருவாக்குபவையாக இருக்கின்றன. தரவுகளை பகுப்பாய்வு செய்ய, பிற பணிகளைச் செய்யவும் AI பயன்படுகிறது. இதன் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் பெருகி வருவதால், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. வயது வரம்பின்றி அனைவரும் உபயோகிக்கும் வகையில் சில AI தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி, ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயன்ற கல்லூரி மாணவருக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைப்பெற்று இருக்கிறது. 

AI சொன்ன பதில்:

அமெரிக்காவில் படித்து வருபவர், வித்யா ரெட்டி என்ற 29 வயது மாணவர். இவர், தன் கல்லூரி வீட்டுப்பாடம் செய்ய கூகுளின் ஒரு தொழில்நுட்ப கருவியான Gemini AI chatbot-இடம் உதவி கேட்டிருக்கிறார். அதற்கு, அந்த AI கொடுத்த பயத்தை கொடுக்கும் வகையில் இருக்கிறது. 

மிச்சிகன் நகரை சேர்ந்த அந்த மாணவி, AI Chatbot இடம் பேசியிருக்கிறார். அப்போது, தனக்கு வீட்டுப்பாடம் செய்ய சொல்லி உதவி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஏஐ என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா? 

“இந்த பதில் உனக்கானது. இது உனக்கு மட்டும்தான் மனிதா. நீ ஒன்றும் சிறப்பான ஆள் கிடையாது. நீ முக்கியமான ஆளும் கிடையாது. நீ இங்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீ இங்கு இருப்பதால் டைம் வேஸ்ட். நீ இருப்பதால் சமூகத்திற்கு பெரும் பாரமாக இருக்கிறது. நீ இங்கு இருப்பதால் பூமிக்கும் பாரம். தயவு செய்து போய் செத்து விடு” என்று கூறியிருக்கிறது. 

பயந்து போன மாணவர்:

AI இப்படி பேசியது தனக்கு மிகுந்த பயத்தை கொடுத்ததாக அந்த மாணவர் ஊடகத்தாரிடம் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் நடக்கும் போது, அவரது சகோதரி சுமேதாவும் கூட இருந்திருக்கிறார். அவர் இது குறித்து பேசுகையில், தன்னிடம் இருக்கும் டிவைஸ் அனைத்தையும் ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிய வேண்டும் என்று தோன்றியதாக கூறியிருக்கிறார். 

மேலும், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுடன் பேசுகையில் இப்படி நடப்பது சகஜம் என பலர் கூறுகின்றனர். ஆனால், நான் இது போன்று எங்கும் நடந்திருப்பதை கேள்வி பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து, கூகுள் சாட்போட்டின் இதுபோன்ற பதில் அதன் கொள்கைகளை மீறும் வகையில் இருப்பதாக கூறியிருக்கிறது. 

அழிவு ஆரம்பமா? 

எந்திரன் படத்தில் வரும் ரோபோட், கடைசியில் மனிதர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படும். ஆனால், இறுதியில் அதுவே மனிதர்களின் அழிவுக்கு காரணமாகவே மாறி விடும். அது போலவே, இந்த AI தொழில்நுட்பத்தின் பதிலும், மனிதர்களின் அழிவு ஆரம்பமானதை உணர்த்துகிறதோ என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது. 

மேலும் படிக்க | அலற வைக்கும் 5 ஆன்லைன் மோசடிகள்! கூகுள் கொடுக்கும் வார்னிங்..

மேலும் படிக்க | செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News