மெர்சல் குறித்து சூப்பர் ஸ்டாரின் புதிய ட்வீட்!

Last Updated : Oct 23, 2017, 09:24 AM IST
மெர்சல் குறித்து சூப்பர் ஸ்டாரின் புதிய ட்வீட்! title=

"மெர்சல் படத்தில் முக்கியமான பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது" என நடிகர் ரஜினிகாந்த் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

’ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ பட நிறுவனத்தின் 100-வது படமான மெர்சல் திரைப்படம், நடிகர் விஜய் நடிக்க இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவந்தது. பல தடைகளுக்கு பிறகு இப்படம் திரைக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இக்காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் யாவும் உன்மைக்கு புரம்பானவை, எனவே இக்காட்சிகளை உடனடியா நீக்க வேண்டும் என பா.ஜா.க தரப்பில் இருந்து தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது!

"மெர்சல் படத்தில் முக்கியமான பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்!

Trending News