ரஜினி அரசியலுக்கு வந்தால் தமாகா வரவேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நண்பர். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அதற்காக வீண் சர்ச்சைகளை கிளப்ப கூடாது என ஜி.கே. வாசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
சமுக வலைதளத்தில் அவர் கூறியது, பின்வருமாறு:-
* தமிழக அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். எந்த விஷயத்திலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத அரசாக இந்த அரசு உள்ளது.அதேபோல எதிர்க்கட்சியும் வலுவாக செயல்படவில்லை.
தனது உடல்நலத்தை அமெரிக்க கேசினோவில் மேம்படுத்தும் ரஜினிகாந்த் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டிவிட் செய்துள்ளார்.
மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின், அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்காவில் கேசினோ ஒன்றில் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30% கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 30% கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி உள்ள திரையங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில்:-
தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சகணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்த வண்ணம் உள்ளன.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபோது, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள்” என்று சூசகமாக அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகி எதிர்ப்பு, ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீடுகளை வழங்கினார்.
அப்போது, 'இலங்கை அதிபர் மைத்திரி பாலா சிறிசேனாவைச் சந்தித்து, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இதனிடையே, 'ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது' என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்துசெய்தார்.
ரஜினிகாந்த் வரும் ஜூலை மாதம் இறுதியில், அவரின் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவிக்கையில், “ஜூலை மாதம் இறுதியில் ரஜினி அவரின் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக தான் தன் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
அரசியலில் அமைப்பு சரியில்லை என தெரிவித்துள்ள ரஜினிகாந்த், அதை மாற்றும் முனைப்புடன் களமிறங்குவார்.” என தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.
இன்று விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசியல் சம்பாதிக்கும் தொழில் அல்ல. அரசியல்வாதிகள் சேவை மனப்பான்மையுடன் இல்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது.
கட்சி ஆரம்பிக்கவே தான் ரஜினிகாந்த் அவர்கள் நான் பச்சை தமிழன் என்று கூறுகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
வாழவைத்த தமிழகம் என்று கூறி வந்த ரஜினிகாந்த், தற்போது மட்டும் ஏன் நான் பச்சை தமிழன் என்று கூறுகிறார். அரசியலில் நுழைவதற்காக தான் இப்படி கூறுகிறார். தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வராது, ஆனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டும் வருவார்கள் என்றால் அது எப்படி நியாயமாகும்?
அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அதிமுக என்ற பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மோடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் எப்படி சந்திக்கிறார்? இதில் எந்த அரசியலும் இல்லை எனக்கூறுவதை எப்படி நம்புவது?
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக ராஜ்ய சபை எம்பி சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை ரஜினிகாந்த் சென்னையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்தார்.
பாஜக-வுக்கு நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை ஏற்று கொள்வோம் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னையை மோடி அரசு கட்டுப்படுத்தும்.
அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை பாஜக ஏற்று கொள்வோம். மேலும் ரஜினிகாந்துக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தேசிய கட்சிகளுடன் இணையாமல் தனியாக ஒரு கட்சி தொடங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் நிகழ்ச்சியை ஒட்டி அவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியத்தைச் செலுத்தினார் திருநாவுக்கரசர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
தமிழகத்திற்கு நல்ல பல கல்வித் திட்டங்களைத் தந்தவர் ராஜீவ் காந்தி. ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவர் தேசியக் கட்சிகளுடன் இணைய மாட்டார். தனிக்கட்சித்தான் தொடங்கவேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்
5_வது நாளான இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது தமிழக அரசியல் தலைவர்களை குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி. சோ அடிக்கடி சொல்வார். ஸ்டாலினை மட்டும் சுதந்திரமாக செயல்பட விட்டால் மிகவும் நன்றாக செயல்படுவார். ஆனால் சுதந்திரமாக விடமாட்டார்கள் என்றார். மேலும் அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோரையும் பாராட்டி பேசினார்.
ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் கண்டிப்பா க்யூஆர் கோடு அடையாள அட்டை உடன் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதி என ரஜினிகாந்த் மன்ற நிர்வாகியான சுதாகர் கேட்டுக்கொண்டு உள்ளார் வரும் 15-ம் தேதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தாரவி பகுதியை மையாக கொண்ட கதை எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் ரஜினக்கு மிரடட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்தக் கடிதத்தில்:-
கடந்த மாதத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் முடிவு செய்தார். ஆனால் சில காரணங்களால் அந்த நிகழ்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. அதற்கான விளக்கத்தையும் அப்பொழுது ரஜினி கூறியிருந்தார்.
இந்நிலையில், ரசிகர்களை சந்திக்க ரஜினி நாள் ஒதுக்கி உள்ளார். அதாவது வரும் 15-ம் தேதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த், பா.இரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு மே 28-ம் தேதி தொடங்குகிறது.
‘கபாலி படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவாவில் தங்கியிருந்து படத்தின் கதை தயாரிப்பு பணியில் பா.இரஞ்சித் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று தனுஷ் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.
இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.