திருப்பூர் பெருமாநல்லூரில் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன் ஏற்பாட்டில் அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா, பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது 2026ல் நிச்சயமாக அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும், திமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தராமல் இருக்கிறது. எனவே பொதுமக்கள் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் பேசினார். பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காக, பொதுக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு புதிதாக பிளாஸ்டிக் நாற்காலி தரப்படும் என அறிவிக்கப்பட்டு, 1500 புதிய நாற்காலிகளை வாங்கி கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களை அதில் அமரவும் வைத்திருந்தார்கள்.
மேலும் படிக்க - உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்!
நலத்திட்ட உதவியாக நாற்காலிகள் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் 1500 நாற்காலிகளும் நிறைய அளவுக்கு பொதுமக்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்ததும் பொதுமக்கள் அனைவரும் அவரவர் அமர்ந்திருந்த நாற்காலிகளை எடுத்துக் கொண்டு, கூட்டம் கூட்டமாக தலையில் வைத்து கொண்டு சென்றார்கள். இதைப் பார்த்த ரோட்டில் சென்ற பொதுமக்கள் எல்லாரும் ஏன் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே சென்றார்கள். ஆனால் கூட்டம் சேர்ப்பதற்காக புது யுத்தியாக புதிதாக நாற்காலிகளை அதிமுக நிர்வாகிகள் வழங்கியது தெரிந்து பலரும் நாமும் அதிமுக கூட்டத்திற்கு சென்றிருக்கலாமே என்று பேசிக்கொண்டு சென்றதை காண முடிந்தது.
திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு கூட்டம் கடந்த சனிக்கிழமை மாலை திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக முன்னால் அமைச்சரும் கழகப் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான தங்கமணி கலந்து கொண்டார். கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஆர்ப்பாட்டம் போராட்டம் என அதிமுக கட்சிக்கு ஒத்துழைப்பதால் திமுக அலறிக் கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 520 வாக்குறுதி கொடுத்தீர்கள், அதில் பத்து கூட நிறைவேற்றவில்லை. இது பொய் இல்லையே. நீட் தேர்வை ஒழிப்பேன் என கூறினார்கள் ஆனால் அது ஒழிக்கவில்லை. விலைவாசி மின் உயர்வு சொத்து விலை உயர்வு உயர்ந்துள்ளது.
கடுமையான மின் உயர்வால் அத்தியாவசிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் எந்தவித விலைவாசி, வரி உயர்வில் கை வைக்கவில்லை. கடன் வாங்கும் அரசாக திமுக அரசு உள்ளது. கடந்த 41 மாத திமுக ஆட்சியில் 3லட்சத்து.75 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். 13 ஆயிரத்து 500 கோடிக்கு நிதி ஒதுக்கீடு மகளிர் உரிமைக்கு, ஐம்பதாயிரம் கோடி டாஸ்மாக் வருமானம், மின்சார கட்டணம் 35 ஆயிரம் கோடி, சொத்து வரி பல்லாயிரம் கோடி பெறுகின்றனர். ஆனால் நல்லது செய்யவில்லை. திமுகவை அண்ணா ஆரம்பித்தார்.எல்லா திட்டத்திலும் கலைஞர் பெயர் வைக்கின்றது இந்த அரசு .சர்வாதிகாரியாக இருந்தவர்கள் ஆட்சிகள் எப்படி எல்லாம் போய் உள்ளது என நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். திமுகவில் தியாகம் செய்தவர்கள் மூத்தவர்கள் உள்ளனர் அவர்கள் கப்சிப் என இருக்கின்றனர்
கீழ் மட்டத்திலிருந்து உழைத்து முதல்வராக எடப்பாடி வந்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி போன்றவரை ஒதுக்கிவிட்டு ஒரே ஒரு பொதுச் செயலாளராக திறம்பட கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். எடப்பாடிக்கு ஒன்றுமே தெரியவில்லை என ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் பேசுகிறார். எம்ஜிஆர் இருக்கும்போது மூன்று முறை ஜெயித்த கட்சி அதிமுக. அதிமுக அரசு திட்டங்கள் மூடுவிழா காணப்பட்டுள்ளன. புதிதாக காலையில் சோறு போட்டோம் மதியம் சோறு போட்டோம் என திமுகவினர் நடத்துகின்றனர். எம்ஜிஆரே சத்துணவு போட்டவர் ஆவர்.புதிதாக இவர்கள் காட்டுகின்றனர். மாற்றம் வேண்டும் என மக்களே பேசிக்கொண்டுள்ளனர். வெற்றி பெறும் கூட்டணி அண்ணா திமுக பக்கம் இருக்கும் என்று பேசினார்.
மேலும் படிக்க | ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரி சிக்கியது எப்படி? தகவல் கொடுத்த வீட்டு பணியாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ