பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்கள் எதுவும் 175 நாட்களை கடந்து ஓடவில்லை. கடந்த 2007ம் ஆண்டு ரஜினி நடித்த சிவாஜ் 200 நாட்களை தாண்டி ஓடியது. இதேபோல் எந்திரன் படமும் 175 நாட்களை கடந்தது. அதன் பிறகு ரஜினி நடிப்பில் வந்த அதிக நாட்கள் ஓடியது இல்லை..
மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சில தீய சமுக விரோதிகளால் திடீரென வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என பிரபலங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
1991-ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்மதுரை. ரஜினியுடன் கவுதமி, எம்எஸ் மது, செந்தில், சரண்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினியின் காமெடியும் உணர்ச்சிகரமான நடிப்பும் பார்த்தவர்களை பரவசப்படுத்திய படம்.
இந்நிலையில் அந்தப் படத்தின் தலைப்பில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் சீனு ராமசாமி படம் இயக்கினார். சீனு ராமசாமிக்கு இந்தப் படம் வெற்றியை தந்தது.
விஜய் சேதுபதி நடித்த இந்த தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100-ம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என விரும்பினர் படக்குழுவினர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 'கபாலி' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது படக்குழு.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியில் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் அளித்த படமாக இருந்தது.
கபாலியின் டீசர், டிரெய்லர், பாடல்கள் என்று இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்ட ஒவ்வொரு வீடியோவுமே அட்டகாசமான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.
மகள் ஐஸ்வர்யா தனுஷ்க்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் ரஜினிகாந்த்.
மகள் ஐஸ்வர்யா தனுஷ் எழுதியுள்ள புதிய புத்தகத்திற்கு டிவிட்டர் வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.முதன் முறையாக ஐஸ்வர்யா தனுஷ் தனது வாழ்வில் நடந்த, சுவையான, சோகமான மற்றும் தனது அனுபவம் ஆகியவற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்த புத்தகத்திற்கு 'ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்' ன்று பெயரிடப்பட்டுள்ளது.
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.
இன்று நடிகர் ரஜினிகாந்தின் 66-வது பிறந்தநாள் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என அமிதாப் பச்சன் வாழ்த்தியுள்ளார்.
T 2469 - It is Rajnikant's birthday on Dec 12th and we wish him greater glory happiness and good helath .. pic.twitter.com/hRQRyYZ7Q6
தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி காலமானார். அதேபோல 7-ம் தேதி மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்கள் அதிகாலை சென்னையில் காலமானார்.
தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.
தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அன்று பிறந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார், இவரது இயர் பெயர் வாஜி ராவ் கெய்க்வாட்.
ராமோஜி ராவ் கெய்க்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பெங்களூரில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.
இந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் அவர்கள் அங்கே பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட காரணத்தால் அவரது மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி காலமானார். அதேபோல 7-ம் தேதி மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்கள் அதிகாலை சென்னையில் காலமானார். இருவருக்குமே அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் வருகிற 12 ந்தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிறது. தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி மும்பை சென்றடைந்தார்.ஏராளமான திரை துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றன.
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற இருந்தது. ஆனால் திடிரென இன்று மாலை '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டப்பட்டது.
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் பிரம்மாண்டமாக விழா நடைபெற இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியிருந்தார்.
அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவிலிருந்து செல்லாது. நவம்பர் 9-ம் தேதி முதல், இந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும் என்று தெரிவித்தார்.இதற்கு பதிலாக புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் தாள்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இன்று பல பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் . 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவிற்கு தொண்டாற்றிய இந்த மகா கலைஞனை பற்றி பார்போம்
1954- ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். சென்னை சாந்தோம் பள்ளிகளில் படித்தார்.
1960-ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வந்தார். முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த்
கேட்டறிந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்து பேசினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதுபற்றி காங்கிரஸ் சார்பில் மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறபட்டது.
திடீரென்று இருவரும் ஆழ்வார்பேட்டையில் தனுஷ் வீட்டில் சந்தித்து பேசியதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவே கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.