பிரபல இந்தி நடிகர் வினோத் கண்ணா (70) புற்றுநோய் காரணத்தால் காலமானார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக வினோத் கண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்.
வினோத் கண்ணாவின் மறைவுக்கு இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
அவருடைய மறைவுக்கு ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
'' சச்சின் பில்லியன் ஏ ட்ரீம்ஸ்'' என்ற திரைப்படம் மே 26-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான டிரைலர் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இதன் வெற்றிக்கு தனது டிவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். பதிலுக்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்து சச்சினும் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
''நன்றி தலைவா! தமிழில் இந்தப் படத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று சச்சின் தெரிவித்துள்ளார். சச்சினின் இந்தப் படம் தமிழ், மராத்தி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளி வருகிறது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், 'நெருப்புடா' படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் பங்கேற்றனர்.
நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர்'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மறைந்த கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் நினைவேந்தல் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷ்ராஹாசன், சுஹாசினி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
நினைவேந்தல் கூட்டம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியது:-
மத்திய அரசு முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மேக் இன் இந்தியா அந்தஸ்து வழங்கப்படுகிறது. மேலும் அங்கீகாரமும் சில சலுகைகளும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் சூப்பர் ரஜினி நடிக்கும் 2.O படம் மேக் இன் இந்தியா அந்தஸ்தை பெறுகிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இந்தியாவிலேயே உலகத் தரத்தில் தயாராகி உள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தலைவர், துணைத்தலைவர் , செயலாளர், பொருளார் உட்பட 27 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த தேர்தல் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கிடையே நடைபெற்று வருகிறது. தமிழ் திரைப்பட முக்கிய நட்சத்திரங்கள் தங்களது அடையாள அட்டையை தேர்தல் அதிகாரியிடம் காட்டி வாக்களித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று சந்திக்க உள்ளனர் என தகவல் வெளியானது.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும், இன்று காலை ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார். ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர் மலேசிய பிரதமரும் அவர் மனைவியும். ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக வரும்படி இந்த சந்திப்பில் அழைப்பு விடுத்தனர்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நஜீப் ரசாக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் வருகிறார்.
இந்தியா வரும் அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் கவர்னரை சந்திக்க உள்ளார். அடுத்து நஜீபும், அவரது மனைவியும் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
ரஜினி ரசிகர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் 31-ம் தேதி நடைபெற உள்ளது.
ரஜினி ரசிகர் மன்றத்தில் மாநில பொறுப்பாளராக இருக்கும் சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலேசனை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் மற்றும் செயலாளர் சென்னை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை விழாவிற்கு செல்ல முடியாத சூழலில், அங்குள்ள ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் நிகழ்ச்சி வரும் 10-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவதாக கூறப்பட்டது.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் எங்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை மேலும் தமிழக அரசியல்வாதிகள் வதந்தி பரப்புகின்றனர் என லைக்கா நிறுவனம் சாடியுள்ளது.
இலங்கை வவுனியாவில் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை மூலமாக ஈழத் தமிழருக்கு 150 வீடுகள் ஒப்படடக்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினியின் இலங்கை பயணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் தமது பயணத்தை ரத்து செய்வதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ரஜினிகாந்த் இலங்கை செல்வதில் எந்த தவறும் இல்லை என பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் சுமார் 150 வீடுகள் கட்டப்பட்டு, அவை தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் விழா யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அந்த நிகழ்விற்கு நடிகர் ரஜினிகாந்த் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லைகா நிறுவனம் தயாரிபில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் “2.0” படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை மக்களுக்கு தருவதற்காக இலங்கையில் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.
அதில் கலந்துகொள்ள சூப்பர்ஸ்டாருக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நின்றிருந்த படப்பிடிப்பு வாகனங்களை புகைப்படம் எடுத்த செய்தியாளர்கள் மீது படக்குழுவினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக 2.0 படத்தின் டைரக்டர் ஷங்கரின் உதவியாளர் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், உதவி இயக்குனர்கள் அலெக்ஸ், சுந்தர்ராஜன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று திடீரென ரஜினியைச் சந்தித்த கங்கை அமரன்
பாரதீய ஜனதா சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சென்னையில் உள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று கங்கை அமரனுக்கு திடிரென வரை சந்தித்தார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்தார் என கூறப்படுகிறது.
கங்கை அமரன் இரு ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லண்டனில் கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள்,அரசியல் பிரமுகர்கள் அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் கூறியதாவது:-
ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு முன் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம் பாட்ஷா. அட நம்ம சூப்பர் ஸ்டார் நடிப்பில் இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் கடந்த வாரம் ஆனது.
இப்படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் கூட்டம். புதிய ஒளித்தரம், ஒலித் துல்லியம், புது பின்னணி இசை என அசத்தியது படம். காட்சிக்குக் காட்சி அதிர்ந்தது அரங்கம். தலைவரின் பாட்ஷாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
முதல் நாளில் இருந்து இப்போதுவரை அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ 1.75 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நாத்து வரும் எமி ஜாக்சன் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.
லைகா புரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்த நிலையில், எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை எமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.