New Smartphones Expected In Upcoming December: 2024ஆம் ஆண்டு இன்னும் சிறிது நாளில் நிறைவடையப் போகிறது. 2025 புத்தாண்டு பிறக்கப்போகிறது. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது நீங்கள் அடுத்தாண்டை சிறப்பாக தொடங்குவதற்கு இந்த டிசம்பர் மாதத்தில் பல்வேறு விஷயங்களை திட்டமிட வேண்டும். அந்த வகையில், புத்தாண்டில் நீங்கள் பழைய விஷயங்களை துறந்து விஷயங்களை தொடர்வதற்கும் இந்த டிசம்பர் மாதம்தான் ஒரு பாலமாக இருக்கும்.
அந்த வகையில், புத்தாண்டுக்கு முன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் இந்த டிசம்பர் மாதத்தில் அறிமுகமாகும் புதிய மாடல்களை தெரிந்துகொள்ளுங்கள். டிசம்பர் மாதத்தில் அறிமுகமாகும் இந்த மொபைல்களை வாங்கி புதிய தொழில்நுட்பம், புதிய டிசைன்கள், அப்டேட்டான அம்சங்கள் உடன் இந்த புத்தாண்டை நீங்கள் புதிய பொழிவுடன் தொடங்கலாம். அந்த வகையில், வரும் டிசம்பர் மாதத்தில் அறிமுகமாக உள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இங்கு விரிவாக காணலாம்.
iQOO 13
வரும் டிசம்பர் மாதத்தில்தான் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இதில் Snapdragon 8 elite சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது முந்தைய iQOO 12 மொபைலில் இருந்து Snapdragon 8 Gen 3 சிப்செட்டை விட 31% வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த மொபைல் கேமராவின் வெளிபுறத்தில் அதுவும் வட்டவடிவில் எல்இடி லைட்கள் Energy Halo டிசைனில் வந்துள்ளது. இது புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் கூடுதல் ஒளியை அளிக்கும்.
Oneplus 13
டிசம்பர் மாதம் ஒன்பிளஸ் மொபைலின் இந்த மாடல் வெளியாகும். இருப்பினும் இந்த மொபைல் டிசம்பரில் சீனாவில்தான் வெளியாகும் என கூறப்படுகிறது. சீனாவில் டிசம்பரில் வெளியானால் 2025ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியா உள்பட உலகம் முழுவதும் வந்துவிடும். இதில் 6,000mAh பேட்டரி, Snapdragon 8 Elite சிப்செட் என அதிநவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது.
Redmi Note 14 Series
செப்டம்பரில் இது மொபைல் சீனாவில் வெளியாகிவிட்டாலும் வரும் டிசம்பரில்தான் இந்தியாவில் அறிமுகமாகிறது. டிசம்பர் கடைசியில் இதனை நீங்கள் இந்தியாவில் வாங்கலாமம். 6.67 இன்ச் OLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், டிஸ்பிளே ஒளி 3,000 nits வரை பிரகாசமாக இருக்கும். இதன் இந்திய விலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
Xiaomi 15 Series
இது சீனாவில் இந்த டிசம்பர் இறுதியில் அறிமுகமாகும். தொடர்ந்து 2025 தொடக்கத்தில் உலகம் முழுவதும் அறிமுகமாகும். செயற்கை நுண்ணறிவு வசதிகளும் இதில் இடம்பெறும். இதிலும் Snapdragon 8 Elite சிப்செட் உள்ளது.
Realme Narzo 70 Curve
இதில் MediaTek Dimensity சிப்செட் 6.67 இன்ச் டிஸ்பிளே உடன் வருகிறது. இதன் டிசைன், ஸ்டைல் ஆகியவை கவர்ச்சிகரமாக உள்ளது.
மேலும் படிக்க | Tech Tips: ஸ்மார்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகிறதா... இந்த தவறுகளை செய்யாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ