தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் ரயில்கள் ரத்து!

Last Updated : Aug 30, 2017, 10:32 AM IST
தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் ரயில்கள் ரத்து! title=

மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் மும்பை மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மும்பை மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.

மேலும் கன மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக மும்பை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களால் அங்கு தரையிறங்க முடியவில்லை. அவை மும்பைக்கு அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பையில் கன மழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு மும்பையில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ள பாதிப்பைப் போன்ற நிலை 12 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஏற்பட்டுள்ளது. 

Trending News