மும்பை கட்டட விபத்து; பலி 17ஆக உயர்வு

Last Updated : Jul 26, 2017, 08:50 AM IST
மும்பை கட்டட விபத்து; பலி 17ஆக உயர்வு title=

மும்பையில் 4 மாடிக்கட்டம் இடிந்து விழுந்த விபத்தில்பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளனர்.

மும்பையில் கடந்த சில தினமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காட்கோபர் பகுதியில், 35 ஆண்டுகள் பழமையான, நான்கு அடுக்குமாடி குடியிருப்பு, பலத்த மழை காரணமாக, நேற்று இடிந்து விழுந்தது. அங்கு வசித்தவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கினர். 

மும்பை காட்கோபர் புறநகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாத குழந்தை உட்பட 12 பேர் பலியானார்கள். இடிந்து விழுந்த அந்த கட்டடத்தில் 12 குடும்பங்கள் குடியிருந்தன. 

இந்த வினைத்து நேற்று காலை 10.43 மணியளவில் கட்டிடம் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்து தரை மட்டமானது.

கீழ் தளத்தில் தனியார் மருத்துவமனையும் செயல்பட்டது. சம்பவ இடத்தில் 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்க விரைந்தனர். 

தற்போது பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர்ர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டடம் இடிந்து விழுந்ததில் 30 முதல் 40 வரை இடிபாட்டில் சிக்கியிருந்தனர். இவர்களில் சிலர் மீட்கப்பட்டனர் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, இக்கட்டிட விபத்து தொடர்பாக சிவசேனா தலைவர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்ட முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 15 நாட்களில் அறிக்கை தாக்க செய்ய மும்பை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Trending News