சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி நிலவின் முதல் வட்டத்தில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
உலகின் மிக மிகவும் பிரபலமான விஞ்ஞானி இங்கிலாந்தின் ஸ்டீபன் ஹாக்கிங். இவர் உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இவர் உலக மக்களுக்கு ஒரு எச்சரிக்கை தந்துள்ளார். அதாவது, அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தை கண்டறிந்து அங்கே குடியேற வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார். இது உலக மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது பூமி அடியிலிருந்து கெமிக்கல் கலவை வெளியேறியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிழக்கு முத்தையா தெரு பகுதியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக பூமிக்கு அடியில் இருந்து கெமிக்கல் கலவை பீய்ச்சியடித்து வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபோல் இப்பகுதியில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது.
பூமியை போன்று 7 புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.
விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கோள்கள் குறித்து அறியும் வகையில் நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போன்றே மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அந்த 3 கோள்களில் நீர் ஆதாரம், பாறைகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிரக சமூகம் இரண்டு வீடியோக்களை பகிர்ந்து கொண்டுள்ளது, இந்த இரண்டு வீடியோக்கள் ஜப்பான் நாட்டின் ககுயா லூனார் ஆர்பிட்டர் கைப்பற்றியது.
முதல் வீடியோவில் நிலவிருந்து புவி உதயம் ஆகும் காட்சியும், இரண்டாவது வீடியோவில் பூமி அஸ்தமனத்தை சூரிய ஒளி அமைக்கும் படி ககுயா லூனார் ஆர்பிட்டர் வீடியோவாக வெளிபட்டபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.