விண்வெளியில் சுற்றும் டெஸ்லா ரோட்ஸ்டர்: விஞ்ஞானிகள் தகவல்!

எலன் மஸ்க்கின் சாதனையான  செந்நிற டெஸ்லா ரோட்ஸ்டர் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நட்சத்திரங்களோடு நட்சத்திரமாக சுற்றுவது டெலஸ்கோப்பில் கண்டறிப்பட்டுள்ளது.  

Last Updated : Feb 12, 2018, 02:02 PM IST
விண்வெளியில் சுற்றும் டெஸ்லா ரோட்ஸ்டர்: விஞ்ஞானிகள் தகவல்! title=

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த வாரத்தில் இவர் செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய செந்நிற டெஸ்லா ரோட்ஸ்டர் கார் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உற்றுநோக்க வைத்துள்ளது. சூரிய குடும்பத்தைக் கடந்து இந்த கார் செவ்வாய் கிரகத்தை அடைய 6 மாத காலமாகும்.

இந்நிலையில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஆஸ்ட்ராய்ட் பெல்ட்டில் நட்சத்திரங்களின் இடையே வேகமான ஒரு பொருள் நகர்வது டெலஸ்கோப்பில் கண்டறிப்பட்டுள்ளது.

வெர்ச்சுவர் டெலஸ்கோப் ப்ராஜெக்ட் ரோட்ஸ்டர் விண்வெளியில் சுற்றி வரும் புகைப்படம், வீடியோவை வெளியிட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர் மாஸி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரோட்ஸ்டரை புகைப்படம் எடுக்கும்போது பூமியில் இருந்து 470,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. ரோட்ஸ்டர் மணிக்கு 14 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற வேகத்திலோ பயணிப்பதாக கூறப்படுகிறது.

இந்த வேகத்தில் செல்லும் போது வெறும் கண்களால் ரோட்ஸ்டரை கண்டறிவது கடினம். எனவே 16"/400மிமி டெலஸ்கோப் மூலம் இதனை காணலாம் என்றும் மாஸி கூறியுள்ளார்.

மேலும் அவர், வானில் உள்ள மற்றவை போல ரோட்ஸ்டர் தெளிவானதாக இல்லை ஆனால் மற்ற நட்சத்திரங்களை விட்டு விலகி வேகமாக நகர்ந்து செல்வது இதனை எளிதில் காண முடிந்ததாக அவர் கூறியுள்ளார். 

Trending News