பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ள இத படிங்க!  

Last Updated : Dec 12, 2017, 05:59 PM IST
பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? title=

பூமி சுற்றுவது நின்று விட்டால் என்ன நடக்கும் என்று எல்லார் மனதிலும் ஒரு கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. பூமி 365 நாட்களும் தன்னை தானே சுற்றி கொண்டும் சூரியனையும் சுற்றி வருகிறது. இது அனைவரும் தெரிந்த ஒரு விஷயம்.

 
இவ்வாறு சிற்றிக்கொண்டே இருக்கும் பூமி திடீர் என்று சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும். அப்படியானால் கண்டிப்பாக 7 நிகழ்வுகள் நடக்கும். என்ன என்றால், முதலில், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 1670 கிமி வேகத்தில் சுற்றும் பூமி சுழற்சியை நிறுத்தும் போது அனைத்து பொருட்களும் கிழக்கு நோக்கி வேகமாக வீசி எறியப்படும்.

 
இதையடுத்து, பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது அதிக அளவிலான கடல் சீற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட இருக்காது.

 பின்னர், பூமி தன்னை தானே சுற்றுவது நிறுத்தினாலும் சூரியனை சுற்றி கொண்டு தான் இருக்கும் எனவே வருடத்தில் 6 மாதங்கள் இருளிலும் மீத ஆறு மாதங்கள் முற்றிலுமாக ஒளியிலும் காணப்படும். 

 இதனால் இருளில் உள்ள 6 மாதங்கள் பனி பிரதேசமாகவும் மீத 6 மாதம் ஒளியில் உள்ளவை பாலை வனமாகவும் மாறிவிடும். 

 பின்பு, சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்.

 பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது வளி மண்டலதில் ஏற்படும் மாற்றத்தினால் காற்றின் வேகம் அணுக்குண்டு வெடிப்பினை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

 பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தியதும் பூமியை சுற்றியுள்ள பாதுகாப்பு காந்த மண்டலம் செயல் இழந்துவிடும்.

இப்போ தெரிந்ததா! பூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்று. அப்போ, கனவிலும்கூட இந்த சந்தேகத்த நினைக்காதிங்க.

Trending News