கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் கடிமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள அணைகள் முழுவதும் நிரம்பியதால், அணைகளில் இருந்த மதகுகள் திறக்கப்பட்டு அதிக அளவில் நீர வெளியற்றப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் வெள்ளம் ஏற்ப்பட்டு உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் இதுவரை 3 லட்சத்துக்கு அதிகமான பேர் வீடுகளை இழந்துள்ளனர். மே மாதம் 29 ஆம் தேதி முதல் நேற்று (ஆகஸ்ட் 17) வரை பலியானவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2094 நிவாரண முகாம்களில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தங்க வைக்கபட்டு உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு உட்பட பல மணி`மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகிறது. தற்போது பீகார் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார்.
முன்னதாக, தெலுங்கான 25 கோடி, கர்நாடக 10 கோடி, பஞ்சாப் 10 கோடி, யூனியன் பிரதேசமான டெல்லி 10 கோடி, ஆந்திரா 5 கோடி, ஒரிசா 5 கோடி மற்றும் தமிழ்நாடு 10 கோடி என மாநிலங்கள் நிதியுதவி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.