ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்!
சென்னை புத்தக காட்சியில், தனது புத்தகங்கள் விற்பனையானது மூலம் கிடைத்த தொகை முழுவதையும் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு வைரமுத்து வழங்கியுள்ளார்.
இவ்விழாவில் பேசிய அவர்... "தமிழ் மொழியானது சீன மொழிக்கு நிகரானது. இந்தியாவின் சரிபாதி பண்பாடு தமிழ் பண்பாட்டை உள்ளடக்கியது.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழைமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. இத்தகு ஹார்வர்டு பல்கலை., யில் தமிழ் இருக்கை அமைப்பது தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் என நம்புகின்றேன்
சென்னைப் புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு விற்பனையாகும் என் நூல்களின் மொத்தத் தொகையை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கைக்குத் தருவதாக அறிவித்திருந்தேன். மொத்த விற்பனைத் தொகை 4 லட்சத்து 61 ஆயிரத்து 370 ரூபாய். அந்தத் தொகையை முழுமை செய்து 5 லட்சம் ரூபாயாகத் தமிழ் இருக்கைக்கு வழங்குகிறேன்." என தெரிவித்துள்ளார்!