கேரளாவில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 லட்சத்துக்கு அதிகமான பேர் வீடுகளை இழந்துள்ளனர். மே மாதம் 29 ஆம் தேதி முதல் நேற்று (ஆகஸ்ட் 17) வரை பலியானவர்களின் எண்ணிக்கை 332 ஆக் உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 56 பேர் உயிரிழந்தனர். 2094 நிவாரண முகாம்களில் சுமார் 80,000 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கபட்டு உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். மழை பாதிப்புகள் பற்றி கேரளா முதல்வருடன் மோடி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு கேரளாவுக்கு ரூ. 500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்யவும் ரூ 2000 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் கேரளா அரசாங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், ரூ. 500 கோடி நிதியுதவி கேரளா அரசுக்கு வழங்கியுள்ளது. முன்னதாக ரூ.100 அளித்துள்ளது. மத்திய அரசு சார்பில் இதுவரை ரூ. 600 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது.
நீங்கள் செய்யும் உதவியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும். தயவு செய்து நிதிஉதவி அளியுங்கள் என கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களை பொருத்த வரை..
தெலுங்கான 25 கோடி + உணவு பொருட்கள்
கர்நாடக 10 கோடி,
பஞ்சாப் 10 கோடி,
டெல்லி 10 கோடி (யூனியன் பிரதேசம்)
தமிழ்நாடு 5 கோடி,
ஆந்திரா 5 கோடி,
ஒரிசா 5 கோடி,
அரியானா 5 கோடி,
பீகார் 10 கோடி,
மகாராஷ்டிரா 20 கோடி போன்ற மாநிலங்கள் வழங்கியுள்ளது.
ஹோட்டல் மற்றும் மருத்துவ துறையில் தொழில் செய்து வரும் ரவி பிள்ளை ரூ 50 கோடியும் மற்றும் தொழில்அதிபர் யூசப் அலி ரூ. 25 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். பாலிவுட் முதல் அனைத்து மாநில திரை நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும், பெரிய பெரிய நிறுவனங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். மேலும் மாநில கட்சிகளும் தங்கள் தரப்பில் இருந்து நிதியுதவி அளித்து வருகிறது.
சாதாரண மனிதர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு கேரளா மக்களுக்காக உதவிகளை செய்து வருகின்றனர். நீங்களும் உதவுகள் செய்ய விரும்பினால்.. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உதவி செய்யவும். நீங்கள் செய்யும் உதவி கண்டிப்பாக மற்றவர்களை காப்பாற்றும்.
லிங்க்: donation.cmdrf.kerala.gov.in