கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா காலமானார். அவரது மறைவைத் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யப்பட்டார். தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி முற்றுகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் சசிகலாவை முதல்-அமைச்சராக நியமிக்க வற்புறத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றனர்.
அதிமுக புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கி பொறுப்பேற்க சம்மதம் கேட்டனர்.
அதிமுக கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக அதிமுக பொதுக் குழு கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் பதவியுடன் சேர்த்து அதிமுக-வின் தலைமை பொறுப்பும் சசிகலாவிடமே வழங்கப்பட்டது.
தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் மோதல்.
தற்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆனால் சில அதிமுக அமைச்சர்கள் சசிகலா முதல்வர் ஆகா வேண்டும் என கூறி வருகின்றனர். பன்னீர்செல்வமும் சசிகலா முதல்வராக வழி விடவேண்டும் என பகிரங்கமாக கூறி வருகின்றனர். இச்சம்பவம் தமிழக அரசியளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களே சசிகலா தான் முதல்வராக வேண்டும் என கூறி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட குடியரசுதலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா நடராஜன் நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
தேனியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் குழந்தைக்கு "ஜெயலலிதா" என்று சசிகலா பெயர் சூட்டினார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா அமர வேண்டும் என்று சில தமிழக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தொண்டர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மற்றொரு தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவை பச்சிளம் குழந்தைகளையோடு சந்திக்கும் பெற்றோர் மனம் குளிர அவரும் பெயர் சூட்டி மகிழ்வது வழக்கமாக கொண்டிருந்தார்.
அதிமுக ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்ற போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11-30 மணி அளவில் மரணமடைந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த தலைமை யார் வாசிப்பார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுப்ப படுகின்றன.
சசிகலா சொல்வதை பன்னீர் செல்வத்தால் செய்ய முடியாது, மேலும் அதிமுக கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா டில்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அவர் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை சந்தித்தார். பிறகு அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவரை தனது ராஜ்யசபா எம்பி பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுகவால் நிர்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் தனக்கு மிரட்டல் வருவதாக சசிகலா ராஜ்யசபாவில் அழுதபடி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.