ஜோஜு ஜார்ஜின் பணி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Pani Movie Review: ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் முதல் படமாக உருவாகியுள்ள பணி படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Nov 22, 2024, 01:43 PM IST
    ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் பணி படம்.
    அவரே இயக்கி நடித்தும் உள்ளார்.
    இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.
ஜோஜு ஜார்ஜின் பணி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!  title=

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் முக்கிய நடிகராக இருந்து வருகிறார், தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மலையாள சினிமாவை தாண்டி தமிழிலும் நிறைய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில், நடிகராக மட்டும் இருந்த ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில், தற்போது தமிழில் இந்த வாரம் வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது. இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், அபிநயா, அபயா ஹிரண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். பணி படத்திற்கு விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க | கம்பேக் கொடுத்துள்ள கார்த்திக் நரேன்! நிறங்கள் மூன்று படத்தின் திரை விமர்சனம்!

கேரளாவின் திருச்சூர் பகுதியில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என அந்தப் பகுதியில் முக்கிய புள்ளிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அந்த பகுதியில் நல்ல மரியாதை இருக்கிறது, அதே சமயம் இவர்கள் மீது நிறைய வழக்குகளும் உள்ளது. இருப்பினும் முக்கிய புள்ளிகளை கைக்குள் வைத்திருப்பதால் போலீசாரால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மறுபுறம் பணத்திற்காக இரண்டு இளைஞர்கள் திருச்சூர் பகுதியில் ஒருவரை கொலை செய்கின்றனர். இந்த கொலைக்கும் ஜோஜு ஜார்க்கும் என்ன சம்பந்தம்? இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அதிரடி ஆக்சன் காட்சிகள் மூலம் சொல்லி இருக்கும் படம்தான் பணி. 

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கைத்தேர்ந்தவர் என்றாலும் அவரது இயக்கத்தில் வரும் படம் எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் தனது முதல் படத்திலேயே ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார் ஜோஜு ஜார்ஜ். ஆக்சன் காட்சிகளிலும் சரி, எமோஷனல் காட்சிகளிலும் சரி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக கையாண்டு உள்ளார். ஜோஜு ஜார்ஜ் மற்றும் அபிநயா இடையே இருக்கும் ரொமான்ஸ் காட்சிகளும், காதல் காட்சிகளும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. அந்த கதாபாத்திரத்தை வைத்து வரும் ட்விஸ்ட் படம் பார்க்கும் நமக்கும் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோஜு ஜார்ஜ் உடன் வரும் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். 

குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இரண்டு இளைஞர்களும் அற்புதமாக நடித்துள்ளனர். அவர்கள் தான் ஒட்டுமொத்த படத்தையும் காப்பாற்றுகின்றனர். அந்த கதாபாத்திரங்கள் டம்மியாக இருந்திருந்தால் படம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. முதல் பாதி ஆரம்பித்ததில் இருந்து இடைவெளி வரை அடுத்தடுத்து பரபரப்புடன் கதை நகர்கிறது. இடைவெளி முடிந்து கிளைமாக்ஸ் வரும் வரை படம் மெதுவாக நகர்கிறது. பிறகு கிளைமாக்ஸ் நெருங்கும் போது முதல் பாதி போல வேகமாக படம் நகர்கிறது. கிளைமாக்ஸில் வரும் கார் சேஸிங் சீன் படமாக்கப்பட்ட விதம் பாராட்டுகளை பெறுகிறது. இரண்டு இளைஞர்களை அவ்வளவு பெரிய போலீஸ் படையும், ரவுடிகள் படையும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லையா என்ற லாஜிக் கேள்விகள் எழுந்தாலும் படம் முடியும்போது அவற்றை யோசிக்க விடாமல் மறக்கடிக்க செய்கிறார் இயக்குனர் ஜோஜு ஜார்ஜ். அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க | ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News