Actress Kasthuri Press Meet: நடிகை கஸ்தூரி நவம்பர் 3ஆம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும், தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஹைதராபாத்தில் கைதானார்
தொடர்ந்து அவர் ஹைதராபாத்தில் தலைமறைவானதாக கூறப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கடந்த 17ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து, நவ. 18ஆம் தேதி காலையில் எழும்பூர் போலீசார் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
விடுதலை ஆவதில் தாமதம்
எனினும் நடிகை கஸ்தூரிக்கு பிணைப் பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால் அவர் இன்று வரை சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று மாலை சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். அதில் பிராமண சங்கத்தினர்,"மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க!" என்று முழக்கமிட்டனர்.
மூன்று மொழிகளில் நன்றி
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். முதலில் தமிழிலும், அடுத்து ஆங்கிலம் மற்றும் தெலுங்கிலும் பேசி மூன்று மொழிகளிலும் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். வழக்கறிஞர்களுக்கும் அரசியல் வித்தியாசம் பார்க்காமல், ஆதரவு தந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அப்போது கூறினார்.
மேலும் பேசிய அவர்,"என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. சிறு குரலாக இருந்த தன்னை, சீரும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. சமூக வலைத்தளங்களில் என்னை ஆதரித்து குரல் கொடுத்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. தம்மீது அன்பு செலுத்தி உறுதியாக ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. சிறு குன்றாக சிறைக்குள் சென்ற தான் தற்போது மலையாக வெளியே வந்துள்ளேன். குன்றாக இருந்த தன்னை மலையாக மாற்றியவர்களுக்கு நன்றி" என்றார்.
மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்... ஆனால் இது யாருக்கு கிடைக்காது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ