தேனியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் குழந்தைக்கு "ஜெயலலிதா" என்று சசிகலா பெயர் சூட்டினார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா அமர வேண்டும் என்று சில தமிழக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தொண்டர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மற்றொரு தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவை பச்சிளம் குழந்தைகளையோடு சந்திக்கும் பெற்றோர் மனம் குளிர அவரும் பெயர் சூட்டி மகிழ்வது வழக்கமாக கொண்டிருந்தார்.
இதற்கிடையே போயஸ் கார்டனுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்திக்கும் சசிகலா தேனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமார் - காயத்திரி தம்பதியினர் தங்களது பச்சிளம் பெண் குழந்தையை சசிகலாவிடம் கொடுத்து பெயர் சூட்டுமாறு கூறினர்.அதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு "ஜெயலலிதா" என்று பெயர் சூட்டினார் சசிகலா. இதனால் அந்த குழந்தையின் பெற்றோரும், அங்கு கூடியிருந்த தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Thirumathi. V.K. Sasikala naming a New born Baby as 'Jayalalitha' ; Baby belongs to an auto driver Senthil Kumar from Theni. pic.twitter.com/fiKjQ0dY9E
— AIADMK (@AIADMKOfficial) December 18, 2016